Some quotes which i Inspired

Film as dream, film as music. No art passes our conscience in the way film does, and goes directly to our feelings, deep down into the dark rooms of our souls.

- Ingmar Bergman



Sunday 13 January 2013

கர்னல் ஜான் பென்னிகுய்க் அவர்களின் அர்ப்பணிப்புக்கு கோடி நன்றிகள்




இப்புவியில் நான் வந்து செல்வது ஒரே ஒரு முறைதான்எனவே,நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும்அதனை உடனே நிறைவேற்ற வேண்டும்!இதனைத் தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லைஏனெனில்,மீண்டும் ஒரு முறை நான் இப்புவிக்கு வரப்போவதில்லை!-கர்னல் ஜான் பென்னிகுய்க்(15.01.1841 - 09.03.1911)

                                       தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் விவசாய பாசணத்திற்கும் குடிநீர் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுய்க் அவர்கள் பிறந்த தினம் இன்று.ஆங்கிலேய அரசு முல்லைப் பெரியாறு ஆணை காட்டும் திட்டத்திற்கு பாதியில் பணம் ஒதுக்கீடு செய்ய மறுத்த நிலையிலும் கர்னல் பென்னிகுய்க் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அந்த பணம் மூலம் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்,இன்றும் தமிழக தென்மாவட்ட மக்களின் வாழ்வதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கிக்கொண்டு இருக்கிறது .தமிழக அரசு தேனி மாவட்டத்தில் பென்னிகுய்க் நினைவாக கட்டிய மணிமண்டபம் அவரின் பிறந்தநாளான இன்று திறப்புவிழா கண்டது.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி மக்களின் தேவைக்காக தனது அனைத்து சொத்துகளை விற்று நாம் பசியை ஆற்றிய கர்னல் ஜான் பென்னிகுய்க் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு அவர் பிறந்த இத்திருநாளில் கோடி நன்றிகள் !!!

No comments:

Post a Comment